அடுத்த ஆண்டிலும் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர்

0 888

அடுத்த ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ஆம் ஆண்டிலும்கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்றும் தாமஸ் பேக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments