இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவு - பாலஸ்தீன அதிபர்
இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வர உள்ளதாக பாலஸ்தீன அதிபர் அறிவித்துள்ளார்.
1967-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரைப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் பாலஸ்தீன அரசு சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அரசு சர்ச்சைக்குரிய மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பதாக அறிவித்தது. இதனால் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
Comments