அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்துத் துறை அலுவலகங்களூக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பல்வேறு தளர்வுகளோடு 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோரை அலுவலகம் வர கட்டாயப் படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் வரும் பணியாளர்களின் பணி நேரத்தையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்போடு பணிபுரிந்த அரசு அலுவலர்களை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
Comments