CBSE 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு, 12ம் வகுப்பு தேர்வு ஆகியவை மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அந்தத் தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படுமென அண்மையில் சிபிஎஸ்இ அறிவித்தது.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வுகள், மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும், வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் அந்தத் தேர்வுகளுக்கான ரிசல்ட், ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
Comments