பரிசோதனைக்காக தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்ட ரயில் பயணிகள் திடீரென ஆர்ப்பாட்டம்
பெங்களூரில் கொரோனா பரிசோதனைகளுக்காக தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ரயில் பயணிகள் திடீரென தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டல்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தியும் வசதிகள் இல்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றும் ரயில் பயணிகள் அமளியில் ஈடுபட்டனர் .
இதனையடுத்து அவர்களை சந்தித்த பெங்களூர் மேயர் கவுதம் குமார் விரைவில் பரிசோதனை முடித்து, வீடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்
Comments