உலகம் முழுவதும் கொரோனாவைப் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது டிரம்ப் சாடல்
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரமாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது அமைச்சர்களுடன் கொரோனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். சீனா மீது தமது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் டிரம்ப் மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் சாடினார்.
Spokesman speaks stupidly on behalf of China, trying desperately to deflect the pain and carnage that their country spread throughout the world. Its disinformation and propaganda attack on the United States and Europe is a disgrace....
— Donald J. Trump (@realDonaldTrump) May 21, 2020
Comments