ஊரடங்கால் சிறுத்தைகள் ஊருக்குள் உலா...அச்சத்தில் பொதுமக்கள்

0 5028
வால்பாறை நகராட்சி பகுதியில் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே வர அஞ்சி வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். விரைவாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

வால்பாறை நகராட்சி பகுதியில் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே வர அஞ்சி வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். விரைவாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அடா;ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியை ஒட்டி தேயிலைச்செடிகள், காப்பித்தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளது.இங்கு சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் இரையைத்தேடி அவ்வப்போது சாலையை கடப்பது இரவில் வழக்கமானது

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் வலம் வரும் சிறுத்தைகள் கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தாக்கி வருகின்றது. சிறுத்தைப்புலி தாக்கி கால்நடைகளை இறந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்

இதற்கிடையே ஊரடங்கால் பகல் நேரங்களிலேயே மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரவில் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை ஏற்பட்டதால் அங்குள்ள சிறுத்தைகளுக்கு வசதியாக போய்விட்டது.கடந்த சில நாட்களாகவே வால்பாறை நகராட்சி பகுதி மற்றம் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மாலை நேரம் இரவு நேரங்களில் வால்பாறை புதிய பேருந்து நிலையம், சுப்பிரமணியசுவாமி கோவில் அருகிலும் மற்றும் சாலைகளிலும் சிறுத்தை நடமாடிய காட்சிகள் காவல்துறை நகரப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிஉள்ளது.நகரப்பகுதியில் வீட்டருகே சிறுத்தைப்புலி நடமாடியதை சிலர் தங்களது செல்போனிலில் படம் பிடித்துள்ளனர்

இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகிறனர் . இந்த சிறுத்தை புலிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

கொரோனாவுக்கு அஞ்சி மனிதர்கள் வீட்டுக்குள் அடங்க, யாருக்கும் அடங்காமல் சுற்றும் சிறுத்தை புலிகளால் வால்பாறையில் மக்களின் உயிர்பலி ஏற்படும் முன்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments