பெங்களூரு நகர மக்களை பீதியடைய வைத்த மகா சப்தம்
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் காதைப் பிளக்கும் பயங்கர சப்தத்தை கேட்ட மக்கள் நில நடுக்கம் வந்து விட்டதோ என்று அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அலையடித்த இந்த சப்தத்தால் கட்டிடங்களும், வீடுகளில் இருந்த ஜன்னல்களும் குலுங்கின. ஆனால் பெங்களூருவில் நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதை அடுத்து மக்கள் ஆசுவாச பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த பயங்கர சப்தம் எங்கிருந்து வந்தது என தெரியாமல் விழித்த அவர்களுக்கு சிறிது நேரத்தில் விடை கிடைத்தது.
நமது விமானப்படையின் சூப்பர்சோனிக் சுகோய் 30 போர் விமானங்கள் பெங்களூருவின் வான் வெளியில் ஒலியின் வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பறந்ததால் ஏற்பட்ட சத்தமே அது என அறிந்த மக்கள் ஆனந்த பெருமூச்சு விட்டனர். இந்திய ராணுவமும் அதை உறுதி செய்துள்ளது.
Comments