ஆயுஷ்மான் பாரத்-ன் கீழ் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பலன் -பிரதமர் மோடி
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்-ன் கீழ் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பலன் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2018 செப்டம்பரில் மோடி துவக்கி வைத்த இந்த திட்டம் உலகிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவ காப்பீட்டு உதவித் திட்டமாகும். இந்த திட்டம் பல கோடி மக்களின் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதாக இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட உதவியாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க ஏழை, எளிய 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையில் மருத்துவமனை செலவினங்களை ஏற்கும் திட்டம் இதுவாகும். இதயம், சிறுநீரகம்,, கல்லீரல் பிரச்சினைகள் உட்பட 1300 வகை நோய்களுக்கு இதனால் சிகிச்சை பெற முடியும்.
Comments