குணமான கொரோனா நோயாளிகளுக்கு மறு சோதனையில் பாசிடிவ் ஏன்?
கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் சோதனையில் பாசிடிவ் என முடிவு வரும் நபர்களிடம் இருந்து தொற்று பரவாது என தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குணமடைந்த, அதே நேரம் தொற்று இருப்பதாக மறு சோதனையில் தெரிய வந்த 285 பேரின் மாதிரிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கொரோனா வைரஸ்-ன் அணுக்கரு மீது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், உயிருள்ள வைரசையும், இறந்த வைரசையும் வித்தியாசப்படுத்த முடியாததால், மறு சோதனையில் தொற்று இருப்பதாக காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இறந்த வைரசுகள் அல்லது தொற்றுத் திறன் இல்லாத வைரசுகள் மட்டுமே உடலில் தங்கியுள்ளதால் இவர்களால் மற்றவர்களுக்கு தொற்ற பரப்ப முடியாது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
Comments