அம்பன் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
அம்பன் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக 64 மீனவ கிராமங்களில் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
புதுச்சேரியில் அம்பன் புயல் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளது. அதிக உயரத்திற்கு எழும் அலைகளால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரம் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காசிமேடு ,எண்ணூர், தாழகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளது. கடலில் ஆக்ரோஷ அலைகள் தடுப்பு சுவர்களை தாண்டி சாலை வரை வருவதால் எண்ணூர் விரைவு சாலை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரக்குப்பம் மீனவகிராமப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள் சேதம் அடைந்தன காட்டுப்பள்ளி - பழவேற்காடு சாலையில் கடல்நீர் புகுந்து சாலையில் வெள்ளம் போல பாய்வதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
Comments