இந்திய பகுதிகளை சேர்த்து வரைபடம் வெளியிடும் நேபாளம்...இரு நாட்டு ராஜீய உறவுகளில் சலசலப்பு..
இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளை தனக்கு சொந்தமானதாக குறிப்பிட்டு நேபாளம் வரைபடம் வெளியிட தீர்மானித்துள்ளதால், இரு நாட்டு ராஜீய உறவுகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
காலாபானி, லிபுலேக்,லிம்பியுத்ரா ஆகியன நேபாள பகுதிகள் என்றும் அவற்றையும் சேர்த்து நேபாளத்தின் புதிய வரைபடம் விரைவில் வெளியிடப்படும் என பிரதமர் கே.பி. ஒலி நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதை அடுத்து நேபாள அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் விஷமம் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது. லிபுலேக்கில் இருந்து மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியா சாலை அமைத்த போதும் நேபாளம் ஆட்சேபனை எழுப்பியது.
Comments