சிங்கப்பூரில் ஹெராயின் கடத்தல் வழக்கில் ZOOM செயலி வழியாக தீர்ப்பு
சிங்கப்பூரில் ஹெராயில் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மலேசிய நபருக்கு ஜூம் செயலி மூலம் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
37 வயதாகும் அவரின் பெயர் புனிதன் கணேசன் ஆகும். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், ஜூம் செயலி மூலம் கூடிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுபோல செயலி மூலம் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூர் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக கணேசனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Comments