நலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் நிவாரண தொகை
நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒரு லட்சத்து மூவாயிரத்து 343 பேருக்கு தலா 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து, அவர்களுக்கும் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments