சென்னையில் 15 மண்டலங்களிலும் 7,672 பேருக்கு நோய் தொற்று

0 1126

சென்னையில் கொரோனா மைய பகுதியாக திகழும் ராயபுரம் மண்டலத்தில் அந்நோய் பாதிப்பு ஆயிரத்து 423ஆக அதிகரித்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 672ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 137 பேருக்கு இதுவரை கொரோனா உறுதியாகியுள்ளது.

இதற்கடுத்து அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 900 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 822 பேருக்கும் கொரோனா இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார் பேட்டை மண்டலத்தில் 723 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 610 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 544 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments