27 வகைப் பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை

0 4457
27 வகைப் பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட 27 வகைப் பூச்சிக்கொல்லிகளை இந்தியாவும் தடை செய்ய உள்ளது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பல வகைப் பூச்சிக் கொல்லிகளைப் பல நாடுகளில் நெடுங்காலத்துக்கு முன்பே தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் இன்றளவும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் 27 வகைப் பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்வதற்கான வரைவை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த எதிர்ப்புகள், கருத்துரைகள் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் பரிசீலித்த பின் இறுதி உத்தரவு ஜூலை மாதம் பிறப்பிக்கப்படும்.

அசிப்பேட், அட்ராசின், பென்பியூராகார்ப், கப்டான், டையூரான், மாலத்தியான், சைனீப், சீரம் ஆகியன தடை செய்யப்பட உள்ள பூச்சிக்கொல்லிகளில் அடங்கும். இறுதி உத்தரவு வந்தபின் இவற்றைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, விற்க, கொண்டுசெல்ல, வழங்க, பயன்படுத்த அனுமதிக்கப்படாது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments