பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்

0 3220

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும்  அமைச்சரவை கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்கு நிவாரண உதவிகள் வழங்க வகை செய்யும் அவசரச் சட்டங்கள், கொரோனா நிலவரம், அம்பன் புயல் உள்ளிட்டவை குறித்து  விவாதிக்கப்படுகிறது.

காலை 11 மணி வாக்கில் துவங்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக 4 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, கொரோனா தொற்று பரவல் நிலைமை உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று கரையைக் கடக்க உள்ள அம்பன் புயலால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்பட வாய்ப்புள்ள சேதங்கள் குறித்தும், அவற்றை கட்டுப்படுத்துவதில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்களின் பங்கு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அம்பன் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என ஏற்கனவே ட்விட்டரில் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments