தீவிரவாதியின் செல்போன் விவரங்களைத் தர ஆப்பிள் நிறுவனம் மறுப்பு - தனிநபர் உரிமையை விட்டுக் கொடுக்காததால் FBI கடும் அதிருப்தி
தீவிரவாதியின் செல்போனை பறிமுதல் செய்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI அந்த செல்போனின் விவரங்களை வெளியிட மறுப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து இருதரப்பிலும் கடும் வாக்குவாதம் வலுத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிளோரிடாவில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஒரு தீவிரவாதியின் செல்போனை பறிமுதல் செய்த போதும் ஆப்பிள் நிறுவனம் அதுகுறித்த அன்லாக்கிங் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டது. வாடிக்கையாளரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆயினும் ஆப்பிள் உதவியின்றியே அந்த தீவிரவாதியின் போனை அன்லாக் செய்து விட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments