அம்பன் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம்

0 1513
அம்பன் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள அம்பன் புயலால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அம்பனின் எதிரொலியாக சென்னையில் நேற்று இரவு வெப்பமான காலநிலையுடன் கூடிய பனிமூட்டம் தென்பட்டது.

நேற்று மாலையில் இருந்தே கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ஏற்கனவே பொதுமுடக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் அச்சுறுத்தல் காரணமாகவும் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments