புதிய இணையதள வைரஸ்...வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் படி மத்திய அரசு அறிவுறுத்தல்

0 6197

கொரோனா பெயரில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் புதிய வைரஸிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது.

இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில்,  கொரோனா தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை யாராவது பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள  ‘செர்பரஸ் ட்ரோஜன்’ ((Cerberus Trojan)) எனும் இணையதள வைரஸ், கணினி அல்லது செல்போனில் புகுந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களையும் ரகசிய குறியீடுகளையும் திருட முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது  என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments