56 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் பச்சை மண்டலமானது ஹரித்துவார்

0 3233
56 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் பச்சை மண்டலமான ஹரித்துவார்

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்துவார் கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

56 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு நேற்று அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கோவில்களைத் திறக்கவும் கங்கை நதியில் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயங்களை தொடங்கவும் பக்தர்கள் அரசிடமிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பூசாரிகள், சாமியார்கள் போன்றோர் கோவில்கள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாவை அனுமதிக்குமாறும் மீண்டும் அனைத்து பூஜை புனஸ்காரங்கள் தொடரவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments