மின் கட்டணத்தை ஜூன் 6ஆம் தேதி வரை அபராதம் இன்றி செலுத்தலாம்...

0 2472
மின் கட்டணத்தை ஜூன் 6ஆம் தேதி வரை அபராதம் இன்றி செலுத்தலாம்...

தமிழகத்தில் மின் கட்டணத்தை ஜூன்  6 ஆம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் வரும் ஜுன் 5 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர், வரும் ஜுன் 6 ஆம் தேதி வரை அபராதம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மின்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments