இன்று கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

0 2579
இன்று கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

அதிதீவிரப் புயலாக உள்ள அம்பன் புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்கிறது. இதனையடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கரையோர மக்கள் வெளியேற்றப்பட்ள்ளனர்.

 வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் நேற்று முன்தினம் சூப்பர் புயலாக உருவெடுத்தது. அதன் பின்னர் தீவிர புயலாக வலு குறைந்து இன்று மாலை மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கிடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அம்பன் புயல் கடந்த 6 மணி நேரத்தில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசாவுக்கு தெற்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் கரையை கடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் புயல் காரணமாக இன்று ஒடிசா, மேற்குவங்க மாநில கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

புயல் பாதிப்புள்ள ஒடிசா கடலோர பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டுக்குப் பின்னர் வரும் தீவிரப்புயல் என்பதால் வீடுகள் மற்றும் மரங்களுக்கு பெரும் சேதம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்பதால் மேற்கு வங்கத்தில் கடலோரப் பகுதிகளில் இருந்து 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பள்ளிகளிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்புகொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அம்பான் புயலிலிருந்து எழும் நிலைமையை சமாளிக்க, அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

ஒடிசாவில் 60 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை வெளியேற்றப்படுவார்கள் என அம்மாநில நிவாரண ஆணையர் பிரதீப் குமார் ஜீனா தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக வீட்டுக்குள் இருக்கச் சொன்ன மக்களை இப்போது வெளியேற்றுவது மிகவும் சிக்கலான பிரச்னை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ((GFX 2 out))

 தற்போது கொரோனா எனும் பேரழிவை தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும், அடுத்து அம்பன் என்ற மற்றொரு பேரழிவை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ் என் பிரதான் தெரிவித்துள்ளார். சாதாரணமாக ஆயிரம் பேர் தங்க வைக்கப்படும் இடத்தில் தற்போது தனிமனித இடைவெளி காரணமாக 500 பேர் மட்டுமே தங்க வைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்களின் கூட்டம் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் 3வது முறையாக நேற்று நடந்தது. அப்போது அம்பன் புயலால் ஏற்படும் நெருக்கடி குறித்து ஆய்வு நடத்தினார். புயலுக்குப் பின்னர் ஏற்படும் மின்தடை மற்றும் தொலைத் தொடர்பு துண்டிப்பு போன்றவற்றை சீர் செய்வது குறித்து கலந்தாலோசித்தார்.

அம்பன் புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் புயல்காற்று வீசி வருகிறது.

ஒடிசாவின் சந்திப்பூர் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதே போல் தமரா துறைமுகப் பகுதியிலும் பலத்த காற்று வீசியது.

பாரதீப் மாவட்டத்திலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள் தலைதெறிக்க ஆட்டம் போட்டன.

இதுவரை ஒடிசாவில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments