ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் - ரயில்வே அமைச்சர்

0 7900
ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் - ரயில்வே அமைச்சர்

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்காக மே ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி ஏசி பெட்டிகள் கொண்ட ரயில் சேவை முதல்கட்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாமல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

தினமும் 200 ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும், இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட் கட்டணத்துடன் கூடிய இந்த ரயிலில் அனைவரும் பயணிக்க முடியும் என்றும், எந்தெந்த இடங்களில் இருந்து ரயில் சேவை தொடங்குகிறது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன் நாளொன்றுக்கு 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments