சிறப்பு ரயில்கள் மூலம் 20 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்
1565 சிறப்பு ரயில்கள் மூலம் 20 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி இருப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்திற்கு 837 ரயில்களும், பீகாருக்கு 428 ரயில்களும், மத்திய பிரதேசத்துக்கு 100க்கும் மேற்பட்ட ரயில்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த தொழிலாளர்களை மீட்க மே 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கான செலவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு ரயில் இயக்க சுமார் 80 லட்சம் ரூபாய் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments