சமாஜ்வாதி கட்சி நிர்வாகி, மகன் பட்டப்பகலில் 2 பேரால் சுட்டுக் கொலை

0 2107
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகியும், அவரது மகனும் 2 பேரால் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி  நிர்வாகியும், அவரது மகனும் 2 பேரால் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும்  வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பல் மாவட்டம் சம்சோய் கிராமத்தை சேர்ந்த சமாஜ்வாதி நிர்வாகியும், 2017ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவருமான சோட்டே லால் திவாகர் தனது மகனுடன் நடந்து சென்றபோது 2 பேர் அவர்களிடம் தகராறு செய்தனர்.

சம்சோய் கிராம தலைவராக திவாகரின் மனைவி இருக்கும் நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் போடப்படும் சாலை, தங்களது விவசாய நிலம் வழியே செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேரும் துப்பாக்கிகளை எடுத்துச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments