இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. காலையில் வர்த்தக நேரத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 711 புள்ளிகள் வரை உயர்ந்தது. இருப்பினும், வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் பேர் விற்றதால், சென்செக்சின் ஏறுமுகம் குறைந்து 167 புள்ளிகள் உயர்வுடன் 30,196ல் நிறைவுற்றது.
அதே போன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில், பின்னர் கீழே இறங்கியது. இறுதியில் 56 புள்ளிகள் உயர்வுடன் 8,879ல் நிலை கொண்டது.
உலோகம், வாகன உற்பத்தி, ஊடகம், எப்எம்சிஜி துறை நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து, 75 ரூபாய் 64 காசுகளாக இருந்தது.
Comments