கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு விமானத்தில் சிகிச்சை
பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் வெளியேற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளில் அமேசான் நதி அருகே வசித்த 11 பேர் உள்பட அடர்ந்த வனத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 23 பேர் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பழங்குடியின அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Comments