சென்னையில் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

0 3594
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலையில்லா உணவு குறித்த அறிவிப்பு வெளியாகாததால், அம்மா உணவகங்களில் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தியதை அடுத்து, சென்னையிலுள்ள 407அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை 3 வேளையும் விலையில்லா  உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments