புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.25 கோடி நிதியுதவி
புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு 2 திட்டங்களின்கீழ் 25 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மெகா கண்டுபிடிப்பு சவால் என்ற திட்டத்தின்கீழ் 10 நபர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் (innovation voucher programme) ஆயிரம் பயனாளிகளுக்கு, தலா 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகா கண்டுபிடிப்பு சவாலுக்கு, மே 29-ம் தேதிக்குள் www.tnigc.in என்ற இணையதளத்திலும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்ட நிதியுதவியைப் பெற https://www.editn.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது
Comments