10ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கான பணிகள் மும்முரம் - அமைச்சர் செங்கோட்டையன்
10ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்குவதற்கான நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் பொதுத்தேர்வு இந்த மாதமே நடைபெற உள்ள நிலையில், நமது மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக முதலமைச்சருடனுடன் தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Comments