பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தினமும் 50 ரயில்கள் - அமைச்சர் பியூஷ் கோயல்
பீகாரில் புலம் பெயர்ந்தோரை கொண்டு சேர்ப்பதற்காக அம்மாநிலத்தில் தினந்தோறும் 50 ரயில்களை இயக்க முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டதிலிருந்து பீகாருக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனர். தற்போது மேலும் 50 ஆயிரம் தொழிலாளர் வரும் நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதல்வருடன் தான் கலந்து பேசியதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழிலாளர்களை அழைத்துச் செல்ல நாளொன்றுக்கு 50 ஷ்ராமிக் ரயில்களை இயக்க நிதீஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
मुझे यह बताते हुए बहुत खुशी है कि बिहार के प्रवासी श्रमिकों के बारे में वहां के मुख्यमंत्री @NitishKumar जी के साथ मेरी सार्थक चर्चा हुई, और उन्होंने कामगारों को घर पहुंचाने के लिये श्रमिक स्पेशल ट्रेनों को 50 ट्रेन प्रतिदिन तक चलाने की स्वीकृति दी है।
— Piyush Goyal (@PiyushGoyal) May 18, 2020
Comments