ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றினால் 28 ஆயிரம் பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
அந்நாட்டில் வைரஸ் தொற்றினால் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏறத்தாழ 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வந்த நிலையில் கடந்த இருதினங்களாக இறப்பு விகிதம் 59 ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு சுகாதாரத்துறை உயர் அதிகாரி, இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சிகிச்சை மேம்பட்டதால் அதிக மக்கள் குணமானதாகவும் கூறினார். தொடர்ந்து புதிதாக தொற்று எங்கு கண்டறியப்பட்டாலும், விரைவாக அதனைக் கட்டுக்குள் கொண்டு வரத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments