புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 1000 பேருந்துகள் -பிரியங்காவின் கோரிக்கையை ஏற்றது உத்தரப்பிரதேச அரசு
உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க 1000 பேருந்துகளை இயக்கும் பிரியங்காவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநிலத்தின் கூடுதல் உள்துறை தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், பிரியங்கா அறிவித்த 1000 பேருந்துகளை ஏற்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களின் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல வசதியாக 1000 பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் அதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பிரியங்கா கோரிக்கை விடுத்திருந்தார்.
Comments