கொரோனா நோயாளிகளை நாய்களால் கண்டறிய இயலுமா என்ற ஆய்வுக்கு பிரிட்டன் அரசு நிதியுதவி

0 1391

கொரோனா நோயாளிகளை நாய்களால் கண்டறிய இயலுமா என்ற ஆய்வுக்கு பிரிட்டன் அரசு 6 லட்சத்து 6 ஆயிரம் டாலர் வழங்கியுள்ளது.

லாப்ரடார் உள்ளிட்ட 6 நாய்களுக்கு கொரோனா நோயாளிகளின் உடல் வாசனைக் கூறுகளை கொடுத்து, கொரோனா பாதிக்கப்படாதவர்களுடன் அவர்களைப் பிரித்தறிய பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ ஆய்வு நிறுவனம், துர்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நாய்கள் சிலவகை புற்றுநோய்கள் மற்றும் பார்க்கின்சன் நோயைக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த ஆய்வு வெற்றி பெற்றால், விமான நிலையங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கூடும் இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் பலன் அளிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments