தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் பலத்த கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி,மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி -மின்னல் மற்றும் சூறை காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கீழ்நாச்சிப்பட்டு, சோமாசிபாடி, சம்மந்தனூர், நொச்சிமலை, வாணியந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த மழையால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது.
அதிதீவிர அம்பன் புயல் வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Comments