மியான்மரில் ரூ. 750 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
மியான்மர் காவல்துறையினர், சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை, யங்கோன் நகரில் பறிமுதல் செய்துள்ளனர்.
சுமார் 17 டன் எடை கொண்ட methamphetamine மாத்திரைகளை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இவற்றை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், சீனாவில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 33 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடியே 70 லட்சம் போதை மாத்திரைகளை தீயிட்டு அழித்தனர்.
ஹெராயினை விட பல மடங்கு போதை அளிக்கக்கூடிய இந்த methamphetamine மாத்திரைகளை, அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், அமெரிக்கா மற்றும் கனடாவில் இதுவரை 1 லட்சத்தி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Comments