மாநில அரசுகள் எடுக்க உள்ள முடிவுகளை அறிந்த பிறகே நாடு தழுவிய அளவில் சேவை- பிளிப்கார்ட்
நான்காம் கட்ட ஊரடங்கு தொடர்பான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாநில அரசுகள் எடுக்க உள்ள முடிவுகளை அறிந்த பிறகே, நாடு தழுவிய அளவில் தனது சேவையை துவக்க உள்ளதாக இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தளர்வுகளில் சில முக்கிய கட்டுப்பாடுகளை தவிர்த்து பெரும்பாலான வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிவப்பு மண்டலங்கள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
அந்தந்த மாநிலங்கள் அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு சேவைகளை அனுமதிக்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம் என்பது மத்திய அரசின் உத்தரவு. இந்த நிலையில் ஊரடங்கால் முடங்கிய லட்சக்கணக்கான சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரின் உற்பத்தியை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லும் பணியை மிகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்போவதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
Comments