உலுக்கும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர கடும் போராட்டம்
சென்னையில் ஒரே நாளில் 364 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது. கொரோனா காவு வாங்கிய 81 பேரில், சென்னையில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, சென்னையில் 364 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 117 ஆக உயர்ந்தது.
செங்கல்பட்டில் ஒரே நாளில் 43 பேர் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 19 பேரும், காஞ்சியில் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தேனியில் 9 பேர் பாதிக்கப்பட, குமரியில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
கள்ளக்குறிச்சியில் 5 பேர் பாதிக்கப்பட, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
மதுரை மற்றும் விருதுநகரில் தலா 3 பேருக்கும், அரியலூர், ராணிப்பேட்டையில் தலா 2 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆக, கரூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட் டங்களில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆக மொத்தம் ஒரே நாளில், தமிழகத்தைச் சேர்ந்த 490 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 46 பேரும் பாதிக் கப்பட்டதால், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 536 ஆனது.
கொரோனா காவு வாங்கிய 81 பேரில், சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை 4 ஆயிரத்து 406 பேர் வீடு திரும்பி உள்ளனர். சென்னையை பொறுத்தவரை, இதுவரை ஆயிரத்து 600 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Update
— Greater Chennai Corporation (@chennaicorp) May 18, 2020
364 Covid-19 Positive cases in Chennai today. #Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/SUoSmHVH4D
Comments