உலக நாடுகளை உலுக்கும் கொரோனா உயரும் உயிர்ப்பலி மிரளும் மக்கள்

0 1681
உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 91 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 91 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கொரோனாவால் ஒவ்வொரு நாளும் நிகழும் உயிர்ப்பலிகளும் பாதிப்புகளும், 3- வது உலகப் போரை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் உலக நாடுகள் எல்லாம் வைரஸ் தொற்றை வீழ்த்த, ஓரணியில் அணி திரண்டுள்ளன.

குட்டி நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை, உலகின் மூலை முடுக்குகள் வரை, கொரோனா வின்ஆக்டோபஸ் கரம் நீண்டு உள்ளது.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், உயிரிழப்பு 91 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெரும் பாதிப்பை சந்தித்து வரும் ரஷியாவில் ஒரேநாளில் மட்டும் 8 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. எனவே, ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஸ்பெயினில், 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட, இங்கிலாந்தில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், உயிரிழப்பு, 3 லட்சத்து 17 ஆயிரத்தை எட்டி உள்ளது. சுமார் 44 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 18 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இதனிடையே, கொரோனாவின் பாதிப்பு, அமெரிக்காவில் குறைய துவங்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைப்பதிவில், இது உண்மையில் நல்ல விஷயம் என டிரம்ப், பதிவிட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments