தமிழகத்தின் ஊரக பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன்களை திறக்க அனுமதி
தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், மாநக ராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், சலூன் கடை களை திறக்க அனுமதி இல்லை . எனவே, சென் னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் மூடப் பட்டிருக்கும்.
சலூன் கடைகளில் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு, முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நாளொன்றுக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு, சலூன் கடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், முடி திருத்த வருபவர்களும் முகக் கவசத்துடன் சலூன்களுக்கு வர வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments