ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி சோதனை முதற்கட்ட வெற்றி என தகவல்
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் அது மனிதர்களிடம் சோதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.
சோதனைகள் வெற்றியடைந்தால் வரும் செப்டம்பரில் பிரிட்டனில் உள்ள 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு பற்றி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தடுப்பூசி சோதனையில் அது கொரோனா வைரசுக்கு எதிரான சக்தியை பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளின் உடலில் செலுத்தப்பட்ட போது வைரஸ் பரவலை தடுத்து நிறுத்தியதாகவும் இது முதற்கட்ட வெற்றி என்றும் அது தெரிவித்துள்ளது.
Comments