சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 1ந் தேதி முதல் தொடங்கும்
ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மொத்தம் 29 பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வடகிழக்கு டெல்லியில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி பாட்டிலை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், நோய்த்தொற்று உள்ள மாணவர்களை தேர்வறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Dear students of class 12th of #CBSE Board here is the date sheet for your board exams.
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 18, 2020
All the best ?#StaySafe #StudyWell@HRDMinistry @mygovindia@cbseindia29 @PIB_India @MIB_India @DDNewslive pic.twitter.com/2ug6Dw8ugA
Comments