சென்னையில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார்

0 960
சென்னையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளான எஸ்பிளனேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார்.

சென்னையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளான எஸ்பிளனேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார்.

அவரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். முன்னதாக காவல் ஆணையருடன் இணைந்து அனைத்து காவலர்களும் இசை வாத்தியங்கள் முழங்க மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கடந்த மாதம் 18ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உதவி ஆய்வாளர் அருணாச்சலம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொண்ட அவர் இன்று பணிக்கு திரும்பினார். அவரை வாழ்த்தி வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,சென்னை காவல் துறையில் மட்டும் இதுவரை 190 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments