உலக நலவாழ்வு அமைப்பின் நடவடிக்கை குறித்துச் சுதந்திரமான மதிப்பீடு செய்ய வலியுறுத்தி 62 நாடுகள் தீர்மானம்
கொரோனா பரவலைத் தடுக்க உலக நலவாழ்வு அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை குறித்துச் சுதந்திரமான விரிவான மதிப்பீடு செய்ய வேண்டும் என இந்தியா உட்பட 62 நாடுகள் வலியுறுத்த உள்ளன.
உலகம் முழுவதும் தற்போது வரை 48 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 லட்சத்து 16 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பெரும்பாலான நாடுகள் கொரோனா பரவலைத் தடுக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும் ஒன்றுக்கொன்று உதவி வருகின்றன.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக நலவாழ்வு அவை இன்று கூடுகிறது. அதில் கொரோனா பரவலைத் தடுக்க உலக நலவாழ்வு அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை குறித்துச் சுதந்திரமான, விரிவான மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் உள்ளிட்ட 62 நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்த வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
Comments