தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு புதிய தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது

0 4315
தமிழகத்தில் 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 54 நாட்களுக்கு பின்னர் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளன

தமிழகத்தில் 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 54 நாட்களுக்கு பின்னர் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம் கொரோனா தாக்கம் குறைந்த 25 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்த தளர்வுகளுடன், மேலும் பல புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 4ம் கட்ட ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததை அடுத்து, புதிதாக தளர்வுகள் வழங்கப்பட்ட 25 மாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதோடு, மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. 54 நாட்களுக்கு பின்னர் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட துவங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments