4ம் கட்ட ஊரடங்கில் பெருமளவு தளர்வு

0 3260
நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதை அடுத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழக்கம்போல் செயல்படுகின்றன.

நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டதை அடுத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழக்கம்போல் செயல்படுகின்றன.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முதல் 3 கட்ட ஊரடங்கின்போது முடி திருத்தகங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 54 நாட்களுக்குப் பின் முடி திருத்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் முகக் கவசம் அணிந்துகொண்டு முடி திருத்தும் பணியை மேற்கொண்டனர். 

டெல்லியில் அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 50 விழுக்காடு அலுவலர்களைக் கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதியளவு அலுவலர்களும் தொழிலாளர்களும் பணிக்குப் புறப்பட்டுச் சென்றதால் சாலையில் வாகனப் போக்குவரத்து இதற்கு முன் ஊரடங்கின்போது இருந்ததைவிடப் பெருமளவில் அதிகரித்துள்ளது. 

மேற்குவங்க மாநிலம் சிலிக்குரியில் முதல் 3 கட்ட ஊரடங்கின்போதும் மருந்தகம், பால் விற்பனையகம், மளிகைக் கடைகள், உணவகங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டிருந்தன. நான்காம் கட்ட ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் 54 நாட்களுக்குப் பின் காலணி, பை, தலைக்கவசம் ஆகியவற்றை விற்கும் கடைகளும், மின்னணுக் கருவிகளை விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

பஞ்சாபில் மொகாலி, லூதியானா, அமிர்தசரஸ் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 54 நாட்களுக்குப் பின் முடி திருத்தகங்களும், அழகு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்துகொண்டு தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் மின்னணுக் கருவிகள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகளும், மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

டெல்லி கான் மார்க்கெட்டில் இறைச்சிக் கடைகள், எழுதுபொருள் கடைகள், பால் விற்பனையகம், பேக்கரிகள், இனிப்பகங்கள், போட்டோ ஸ்டூடியோக்கள் ஆகியவை திறந்துள்ளன.அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் உத்தரப்பிரதேசத்தில் டெல்லியை ஒட்டிய நொய்டாவில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி - நொய்டா சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments