வங்க கடலில் தீவிர புயலாக மாறிய அம்பன்

0 10822

வங்கக் கடலில் அம்பன் தீவிர புயல் வடதிசையில் நகர்ந்து,  உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

வடதமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அம்பன் அதி தீவிர புயல் வடதிசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதி உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக் கடலின் தென்பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வரையிலும், இடையிடையே 165 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும்.

மேலும் தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதேபோல, அடுத்த 2 நாட்களுக்கும் கடும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிக சீற்றத்துடனும் இடையிடையே அதி சீற்றத்துடனும் காணப்படும். எனவே, மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடல் பகுதிகளுக்கு 20ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments