உலகில் கொரோனா பாதிப்பு 48.01 லட்சத்தை தாண்டியது

0 1422
உலகில் கொரோனா பாதிப்பு 48.01 லட்சத்தை தாண்டியது

உலகில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 18 லட்சத்து 58 ஆயிரத்தைக் கடந்தது. 

சீனாவின் வூகான் பகுதியிலிருந்து பரவி, உலகையே ஆட்டுவித்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று நோய். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதேபோல் பலி எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் இருப்பதால், உலகில் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், இதுவரை மருத்துவ சிகிச்சையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகில் கொரோனாவின் மையமாக திகழும் அமெரிக்காவில் பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பெரிதும் பரவாமல் இருந்த ரஷ்யாவில் தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 600ஐயும் கடந்துள்ளது.

ஸ்பெயின், பிரிட்டன், பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு அதிகமாக உள்ளது. இதில் பிரிட்டன், இத்தாலியில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும், ஸ்பெயினில் 27 ஆயிரத்தையும், பிரேசிலில் 16 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஈரான் நாடுகளிலும் பாதிப்பு ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும், பலி எண்ணிக்கை கணிசமாகவும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments