மிகப்பெரிய காய்கறி பழக்கடைகளின் சந்தையான காசிபுர் மார்க்கெட் திறப்பு
டெல்லியில் பழம் மற்றும் காய்கறிகள் விற்கும் மிகப்பெரிய காசிபுர் சந்தை இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் பல ஆயிரக்கணக்கான சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். அவர்களை இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்த போலீசார் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். காசிபுர் மார்க்கெட்டின் செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவியதையடுத்து இரண்டு நாட்கள் மூடப்பட்ட சந்தையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதனிடையே காசிபுர் எல்லை அருகே வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையிலும் அங்கு மக்கள் நடமாட்டமும் வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவில் காணப்பட்டது.
Comments